போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்கா அனுமதித்தால் ஈரானுக்கு எதிராக புதிய போர்: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
லெபனானைப் பாதுகாக்கும் அமெரிக்கா
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப்பிறகு பேசிய டொனால்ட் ட்ரம்ப், ஹிஸ்புல்லாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து லெபனானைப் பாதுகாக்க அமெரிக்காவும் உதவும் என்று மேலும் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ட்ரம்ப் நிராகரித்துள்ளதுடன், மேலும் தெஹ்ரானுடனான ஒப்பந்தத்தை 'அவசரப்படுத்த மாட்டேன்' என்றும் கூறியுள்ளார்.
நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கு தலைமை தாங்குவதற்காக, வரும் வாரங்களில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான நிலைப்பாடு
இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், ஈரானுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதில் தனக்கு அவசரமில்லை என்றும், தற்போதைய திட்டம் மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், அமெரிக்கா அனுமதித்தால் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய போரைத் தொடங்கத்தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தங்கள் நாட்டில் நிலவும் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என்று ஈரானியத் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
கரூரில் அதிக வாக்குப்பதிவு.. வரலாற்றுச் சாதனை கண்ட தமிழக சட்டமன்ற தேர்தல்.. வெற்றிவாய்ப்பு யாருக்கு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam