ஈரான் மீது தாக்குதல் நடாத்தத் தயாராகும் இஸ்ரேல்!!
இஸ்ரேலுக்கு எதிராக ஒரு நிழல் யுத்தத்தை ஈரான் ஆரம்பித்துள்ளதாக போரியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்ற இந்த நேரத்தில், அதற்குப் பதிலளிக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இஸ்ரேலின் அந்த எச்சரிக்கையானது கிட்டத்தட்ட ஈரான் மீதான ஒரு போர்ப் பிரகடனம் போலவே தோற்றம் அழிப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் நோக்கர்கள்.
இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தினம் லெபனானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்கள், இஸ்ரேலில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஆளில்லா வான்கலன் மூலம் ஓமானில் வைத்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பன இஸ்ரேல் பதில் தாக்குதல்களை வழிங்குவதற்கான நியாயப்பாடுகளை இஸ்ரேலுக்கு வழங்குவதாக கூறுகின்றார்கள் இஸ்ரேலிய ராணுவ வல்லுனர்கள்.
3 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையில் 11 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தின் காட்சிகள் கண்களையும் மனங்களையும் விட்டு நீங்காத நிலையில், மறுபடியும் இஸ்ரேல் எரிகின்ற காட்சியை ஊடகங்கள் சுமந்து வருகின்றன.
இஸ்ரேலின் நகரங்களில் மறுபடியும் எச்சரிக்கை சத்தம் எதிரொலிக்க. உயிரைக் காத்துக்கொள்ள இஸ்ரேலிய மக்கள் ஓடும் காட்சிகள் ஊடகங்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.
இம்முறை லெபனானில் இருந்து ரொக்கட்டுக்கள் இஸ்ரேல் மீது ஏவப்படுகின்றன.
ஈரானின் வழிநடத்தல் செயற்பட்டுவருவதாகக் குற்றம் மத்தப்படுகின்ற ஹிஸ்புல்லா அமைப்பின் நடமாட்டமுள்ள தென் லெபனானில் இருந்து இந்த ரொக்கட் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இஸ்ரேல் உடனடியாகவே ஆட்லறி ஏவுகளைகள் மூலம் பதில் தாக்குதல்களை நடாத்தியிருந்தன.
இன்றைய தினம் விமானத்தாக்குதல்களையும் லெபனான் மீது ஆரம்பித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டில் லெபனானில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்ரேலியப் படைகள், எல்லைகளைக் கடந்து லெபனானுக்குள் முன்னேறி அங்கு தங்கியிருந்த ஹிஸ்புல்லாவின் நிலைகள் பலவற்றை அழித்திருந்தன.
இந்த நிலையில் கடந்த மே மாத்தில் லெபனானில் இருந்து மீண்டும் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஜுலை மாத்திலும் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நேற்று முன்தினமும் லெனானில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த ரொக்கட்டுக்கள், பதில் நடவடிக்கை ஒன்றை எடுத்தேயாகவேண்டும் என்ற செய்தியை இஸ்ரேலுக்கு கூறுவதாகக் தெரிவிக்கின்றார்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர்.
மீண்டும் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் அதிகரிப்பதானது, இஸ்ரேலை நெருக்கடிக்குள் தள்ளி, சர்வதேச விதிகளை மீறிய ஒரு நடவடிக்கைக்கு இஸ்ரேலைத் தூண்டும் ஒரு நகர்வாக இருக்கலாம் என்று கூறுகின்றார்கள் போரியல் நோக்கர்கள்.
அதிலும் குறிப்பாக இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரின் இந்த ரொக்கட் தாக்குதல் காலத்தைச் சுட்டிக் காண்பிக்கும் ஆய்வாளர்கள், கடந்த 29ம் திகதி ஜுலை மாதத்தில் இஸ்ரேலின் எண்ணெய் கப்பல் மீது அளிளில்லா வான்கலத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, சில நாட்களில் எறிகணைத் தாக்குதல்கள் லெபனானில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதை குறிப்பிடுகின்றார்கள்.
ஓமானில் வைத்து இடம்பெற்ற அந்த தாக்குதல் ஈரானினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம் சுமத்தி வருகின்றன.
ஈரானோ அந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவரும் நிலையில், ஈரானே அந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது இஸ்ரேல்.
ஈரஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது மேற்கொண்டு வருகின்ற ரொக்கட் தாக்குதல்கள், மற்றும் இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள 'ரோன்' தாக்குதல்கள் போன்றவற்றால் இஸ்ரேல் கடும் கோபம் கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒரு நிழல் யுத்தத்தை ஆரம்பித்திருப்பதை வெளிப்படுத்துவதாக கூறும் இஸ்ரேல், பதில் தாக்குதலுக்கு தாம் தயாராகி வருவதாக தெரிவித்து வருகின்றது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கத் தயாராவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் இஸ்ரேலின் பிரதமர் நபாட்லி பெனட்.
தங்களது எண்ணெய் கப்பல் மீது ஈரானே தாக்குதல்களை மேற்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரேலியப் பிரதமர், ஈரானுக்கு எதிராக சர்வதேச சமூகம் எடுக்க இருக்கின்ற நடவக்கைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பபை வழங்க உள்ள அதேநேரம், இஸ்ரேல் நேரடியாக ஈரானுக்குப் பதில் வழங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு பதில் தாக்குதல் நடாத்தும் உரிமை தமக்கு இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது ஈரானுக்கு எதிரா இஸ்ரேல் தாக்குதல் நடாத்த இருப்பதை அவர் கிட்டத்தட்ட நேரடியாகவே தெரிவித்திருந்தார்.
அடுத்துவரும் நாட்கள் ஈரானையும், இஸ்ரேலையும் யுத்த மேகங்கள் சூழ இருக்கும் நாட்களாக இருக்கும் என்று எச்சரிக்கின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள்.