காசாவின் மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினரை முற்றாக அழிக்கும் நோக்கோடு செயற்படும் இஸ்ரேல் தற்போது காசா மீது தரைவழி தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் படையினரின் செயற்பாடுகள் தொடர்பான காணொளியை இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது உத்தியோகபூர்வ x தளத்தில் பதிவிட்டுள்ளது.
Video activity of the IDF Ground Forces in Gaza. pic.twitter.com/FWt0pFO53q
— Israel Defense Forces (@IDF) October 28, 2023
இஸ்ரேலின் பயங்கர தாக்குதலால் வடக்கு காசாவின் நிலப்பரப்பு மாறிவிட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் முக்கியஸ்தர்
இந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை கடுமையாகியுள்ளமையால் காசாவில் உயிர் ஆபத்துக்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இஸ்ரேலின் போர் விமான தாக்குதலில் ஹமாஸின் வான்வழி கொமாண்டர் அபு ரகபா கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இவர் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கான முக்கிய காரணியாக திகழ்ந்தவர் என இஸ்ரேல் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
