காசா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள்: கடும் சீற்றத்தில் அமெரிக்கா
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த 6 பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ரஃபா பகுதியில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கார்மல் காட், ஈடன் யெருஷால்மி, ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின், அலெக்சாண்டர் லோபனோவ், அல்மோக் சருசி மற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் ஓரி டானினோ ஆகிய பணயக்கைதிகளே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க குடிமகன்
இதில் கோல்ட்பர்க்-போலின் என்பவர் ஒரு அமெரிக்க குடிமகன் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே பைடன் “சம்பவம் தொடர்பில் சீற்றமாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான முன்னோடியில்லாத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ஒரு தாக்குதலை தொடங்கியது.
இதன் போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அன்றிலிருந்து காசாவில் 40,530 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 18 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
