போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஹமாஸ் வழங்கியுள்ள உறுதிமொழி
இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) போர்நிறுத்த விதிமுறைகளுக்கு ஹமாஸ் கட்டுப்படும் என்று அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு உபைதா உறுதியளித்துள்ளார்.
மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டதை அடுத்தே அவர் இந்த தவலை வழங்கியுள்ளார்.
அதேவேளை, ஈரான், லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் ஆயுதப் படைகள் மற்றும் காசா பகுதிக்கு ஆதரவு அளித்ததற்காக ஈராக்கிய மக்களுக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தெரிவிப்பு...
மேலும், அவர், "ஹமாஸ் மற்றும் அனைத்து பிரிவினரும் காசாவுகடகாக ஒன்றாகப் போராடினர். மேலும், அவர்கள் எதிரிகளுக்கு மரண அடிகளை கொடுத்ததுடன் போரின் கடைசி மணித்தியாலம் வரை மிகுந்த வீரத்துடனும் தைரியத்துடனும், சாத்தியமற்ற சூழ்நிலைகளிலும் கூட போராடியுள்ளார்கள்.
காசா மீதான இஸ்ரேலின் 15 மாத கொடூரமான ஆக்கிரமிப்பின் போது பாலஸ்தீனியர்களின் மகத்தான தியாகங்கள் வீணாகப் போகாது” என குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி, ஹமாஸ் போர் நிறுத்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய ஆட்சியில் செயல்படுத்துவதை உறுதிப்படுத்த முன்வருமாறு அனைத்து மத்தியஸ்தர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |