இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல்
காசா கரையில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை (26.01.2024) வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் - பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இன அழிப்பை முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
மேலும், காசாவில் காப்பகம் ஒன்றின் மீது நேற்று நடந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
குறித்த தாக்குதல் தொடர்பில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் மூத்த அதிகாரியான தாமஸ் ஒயிட் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று விளக்கியுள்ளது.

பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தாயக அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: தமிழ் கட்சிகளிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவின் இணைய அடிப்படையிலான சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் ஈடுபடும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கருத்துக்கணிப்பில் கிடைத்த தரவுகளின்படி 35 சதவீத அமெரிக்கர்கள், இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என தெரிவித்துள்ளனர்.
மேலும், 36 சதவீத மக்கள் இது இனப்படுகொலையல்ல எனவும்,. 29 சதவீதம், இரண்டுக்கும் நடுநிலையாகவும் பதில் வழங்கியுள்ளனர்.
இதன்படி, 18-29 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 49 சதவீதம் பேர் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதாகக் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
