நெதன்யாகுவுக்கு ஆட்சியமைப்பதில் சிக்கல்! இஸ்ரேல் தேர்தலில் புதிய திருப்பம்
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான 61 இடங்களை எந்தவொரு கூட்டணியும் பெறவில்லை.
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 120 இடங்கள் கொண்ட கென்னசட்டில் 53 இடங்களை நோக்கி நகர்கிறது. காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால பிரதமர்
இணைந்த பட்டியல் மற்றும் ரஅம் ஆகிய அரபு கூட்டணி கட்சிகள் சாதனை அளவாக மொத்தம் 19 இடங்களைக் கைப்பற்றக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் 5,00,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதால், இறுதி முடிவுகள் இன்று(29) வியாழக்கிழமை மாலையில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், அரபு வாக்குகள் அதிகரித்ததால் வாக்குகள் திருடப்பட்டதாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், புதிய அரசு அமையும் வரை நெதன்யாகு இடைக்கால பிரதமராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.