இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் பலி!
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படையான ரத்வான் படையின் தளபதியான ஹாஷேம் காதரை இஸ்ரேலிய படைகள் கொன்றதாக தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் கானா பகுதியில் வான்வழியாக தாக்குதலில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
Footage showing the elimination of Khader Hashem, who is identified as the commander of the naval force in Hezbollah's Radwan unit. pic.twitter.com/2rPXGhCwaJ
— Israel-Alma (@Israel_Alma_org) March 4, 2025
போர்நிறுத்த நடைமுறை
கடல்வழிகள் வழியாக லெபனானுக்கு ஆயுதங்களை கொண்டு வந்ததற்கு காதர் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாவார்.
ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து படுகொலை செய்யப்பட்ட மிக மூத்த ஹிஸ்புல்லா அதிகாரியாக காதர் காணப்படுகிறார்” என்றுள்ளது.
எனினும், ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை எந்தவித கருத்துக்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |