காசா தலைவரை கொல்லுங்கள்: பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு
ஹமாஸின் காசா தலைவர் யாஹ்யா சின்வாரை (Yahya Sinwar) கண்டுபிடித்து கொல்ல காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் காஸா தலைவர் யாஹ்யா சின்வாரை, “தங்கள் இராணுவம் வேட்டையாடி ஒழிக்கும்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், அதற்கு முன்னதாக காசா மக்கள் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் அவரைக் கொல்ல வேண்டும், அப்போது தான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஹமாஸ் பயங்கரவாதிகள் சுரங்கப்பாதைகளுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும், படைவீரர்களைத் தாக்க நிர்ப்பந்திக்கவும் இஸ்ரேலிய இராணுவம் காலாட்படை மற்றும் டாங்கிகளைப் பயன்படுத்தியபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ஒவ்வொரு பட்டாலியனையும் அழித்து வருவதாகவும், வடக்கு மற்றும் தெற்கிலிருந்து காசா நகரில் உள்ள பயங்கரவாத மையங்களை தாக்குவதாகவும் கேலண்ட் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவடையும் போது காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் இனி ஹமாஸ் இருக்காது, மேலும் காசாவில் அச்சுறுத்தல்களுடன் தலை தூக்கும் எவருக்கும் எதிராக எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேலுக்கு முற்றிலும் சுதந்திரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam