சிரிய கடற்படை தளங்களை தாக்கி அழித்த இஸ்ரேல்!
இஸ்ரேலுக்கான மூலோபாய அச்சுறுத்தல்களை வெளியிட்டு வந்ததாக கூறப்பட்ட சிரிய இராணுவக் கடற்படை தளங்களை தாக்குதல் நடத்தி அழித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் ஹைஃபாவில்(Haifa) உள்ள கடற்படை தளத்திற்கு விஜயம் செய்த அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறிய கருத்தை மேற்கோள்காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் காட்ஸ்,
மூலோபாய திறன்
“இஸ்ரேல் அரசை அச்சுறுத்தும் மூலோபாய திறன்களை தாக்கி அழிப்பதற்காக, IDF (இராணுவம்) பல திட்டங்களை வகுத்திருந்தது.
இதன்படி, சமீப நாட்களில் சிரியாவில் செயல்பட்டு வந்தநிலையில் அந்நாட்டின் கடற்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரிய கடற்படையை பெரும் வெற்றியுடன் அழிக்க எமது நாட்டுபடை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
சிரியாவிற்கும், இஸ்ரேல் கைப்பற்றியுள்ள கோலன் குன்றுகளுக்கும் இடையே உள்ள இடையகப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தங்கள் தங்களை நிலைநிறுத்தியுள்ளது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |