லெபனான் தலைநகரில் இஸ்ரேல் காட்டிய கோர முகம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல், ஏவுகணைகளை சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் ஹெஸ்பொல்லா கட்டிடத்தை குறிவைத்து நேற்றையதினம்(27.04.2025) நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 5 மாதங்களுக்கு முன்னர் இருதரப்பு போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
லெபனான் ஜனாதிபதியின் கோரிக்கை
எனினும், உடன்படிக்கையை மீறி நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
An Israeli airstrike hit Beirut's southern suburbs, targeting what Israel called Hezbollah missile infrastructure. Lebanese President Joseph Aoun condemned the attack and urged France and the US to pressure Israel to stop. #Lebanon #Israel pic.twitter.com/Ga5BgpKbqV
— CGTN Global Watch (@GlobalWatchCGTN) April 28, 2025
எவ்வாறாயினும், குறித்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என லெபனானின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலால் உருவான தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தாக்குதலை கண்டித்த லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஒன், போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்திய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |