காசாவில் அதிபயங்கர தாக்குதல்..! பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 17 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இஸ்ரேலின் தாக்குதலினால் சேதமடைந்த கட்டட பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள துறைகள்
எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் வழங்கிய கனரக வாகனங்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் போர்நிறுத்த ஒப்பந்த முடிவடைந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதனால், காசாவில் உணவு, சுகாதாரம் மற்றும் எரிபொருள் மீதான அனைத்து விதமான துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
