இஸ்ரேலை பாதுகாக்க களமிறங்கும் அமெரிக்கா: பைடனின் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகநாடுகள்
இஸ்ரேல்(Israel) மீது ஈரான்(Iran) முன்னெடுத்துள்ள தாக்குதல் முயற்சியை கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
“ஈரான் அவர்களது முடிவை கைவிட வேண்டும். இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின்(US) உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன்.
இஸ்ரேலை ஆதரிப்போம்
இஸ்ரேலை பாதுகாப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் உதவுவோம், ஈரான் ஒருபோதும் இஸ்ரேலை வெற்றிபெறாது.
அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது. உளவுத்துறை தரவுகளை பொதுவெளியில் பகிர முடியாது. மிக விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுக்கும் என்பது உறுதி.” என்றார்.
இதனிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் உடனடி தாக்குதல் என்பது உறுதி என்பதையும் தாண்டி சாத்தியமான அச்சுறுத்தல் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி எச்சரித்துள்ளார்..
ஆனால் ஈரான் எப்போது முடிவெடுக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. இருப்பினும் அமெரிக்காவும் தயார் நிலையில் இருக்கிறது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |