உடனடியாக மூடப்பட்ட இஸ்ரேல் விமான நிலையம்
ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் இராணுவம்
இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தியுள்ளன.
இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.




