நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழர் நியமனம்
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதியால் அவர் நியமிக்கப்பட்டார்.
நீதியரசர் துரைராஜா
நீதியரசர் துரைராஜா 1988 ஆம் ஆண்டு நீதிச் சேவையில் இணைந்த பின்னர் 1989 ஆம் ஆண்டு அரசு சட்டத்தரணியானார்.
அங்கு அவர் படிப்படியாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார். 2016 ஆம் ஆண்டு, அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார், பின்னர் அதே ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் பதவி உயர்த்தப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு, அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி
இந்திய வம்சாவளி சமூகத்திலிருந்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட முதல் சட்டத்தரணி இவராவார். ஆவார்.
அத்துடன், 1802 ஆம் ஆண்டு இலங்கையின் உயரிய நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்ட முதலாமாவர் இவர் ஆவார்.

சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..




