ஏறாவூர் கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தலில்
மட்டக்களப்பு - ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் - 02 கிராம உத்தியோகத்தர் பிரிவானது இன்று 05.06.2021 ஆந் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிகளவிலானோர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியினால் இன்று 05.06.2021 சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மாணத்திற்கு அமைவாகவே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை,கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 58 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri