இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலானது! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ளது.
இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர, வேறு எந்தவொரு தரப்பினருக்கும் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த காலப் பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, வீடுகளிலேயே இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்னவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதன்படி, ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் தொடர்பில் கண்காணிப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு இன்று அறிவுறுநுத்தல் வழங்கியுள்ளார்.
இதற்காக விசேட பொலிஸ் குழுக்களை ஆயத்தப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.