நாட்டில் மேலும் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
நான்கு மாவட்டங்களில் உள்ள பல கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு, பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொன்னத்தர கிராம சேவகர் பிரிவு, தெல்தர கிராம சேவகர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டிவில பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தினப்புரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் பணாமுரபொலிஸ் பிரிவிற்குட்பட்ட உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் வேவல்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனிடையே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 173 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
