இலங்கை முழுவதும் மீண்டும் ஏற்படவுள்ள மின் தடை! இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின்சாரத் தடைகள் ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகத்தை சரிசெய்ய குறைந்தது 2 நாட்களாவது தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் சுமார் ஆறு மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
நாட்டு மக்களை திக்கு முக்காட வைத்த மின் தடை! வெளியான அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடையின் பின்னணியில் தொழிற்சங்க சதியா? வெளியான முக்கிய தகவல்