இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார உற்பத்தி மையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள், கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
எனினும் கட்டமைப்புகளில் சேவையாற்றும் பொறியியலாளர்கள் அட்டவணையின்படி பணியாற்றுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்திருந்தது..

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
