நாடளாவிய ரீதியில் அதிபர்கள் - ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு: கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி, அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த அதிபர்கள் சங்கம், ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் உட்பட பல ஆசிரியர் சங்கங்கள் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு காரணமாக வடமராட்சியிலும் பாடசாலைகள் இன்று இயங்கவில்லை.
எனினும் பாடசாலைகளுக்கு அதிபர்கள் மட்டும் சமூகமளித்திருந்தனர்.
மலையகம்
இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் காணப்படும் எரிபொருள் பிரச்சினைக் காரணமாக ஆசிரியர்கள் தொழிலுக்குச் செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் ஆசிரியர்கள் வரிசையில் நின்று அந்த பொருட்களைப் பெற்றுக் கொள்வதினால் குறித்த நாட்களில் குறித்த நேரத்திற்குப் பாடசாலைக்குக் கடமைக்கு சமூகமளிக்க முடியாமைக் காரணமாக பல்வேறு மன வேதனைக்கு ஆசிரியர்கள் உட்பட்டுள்ளனர்.
எனவே நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியர்களான தம்மை சிறந்த மன நிலையுடன் கடமையாற்ற அரசு வழி செய்ய வேண்டும் என்று கோரியே இந்த ஒரு நாள் சுகயீன போராட்டத்தை இன்று ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளைப் பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் இந்த சுகயீன போராட்டம் தொடர்பான தகவல்களை அறியாத ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து திரும்பிச் சென்றதைக் காணமுடிந்துள்ளது.
செய்தி - திருமால்
மட்டக்களப்பு
அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் பணி பகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் வரவு குறைவாக இருந்த காரணத்தினால் மாணவர்கள்
திரும்பிச் சென்றதையும் காணமுடிந்ததுடன், சில பாடசாலைகளில் உயர் தரப்பிரிவுகளின்
கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையும் காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.
இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்குச் செவிசாய்த்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - குமார்









சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
