நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்படையினரை சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 881 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை
அத்துடன் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 22 நபர்கள் மற்றும் 389 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையின் போது 23,231 நபர்கள், 9,459 வாகனங்கள் மற்றும் 7,019 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.
இதேவேளை சோதனை நடவடிக்கைகளின் போது, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சாரதிகள் கைது
இதன்போது 97 குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,314 நபர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




