நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடமாடும் தடுப்பூசித்திட்டம்
வவுனியா - கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று (24) காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இதன்போது உரிய சுகாதார நடுமுறைகளை பேணி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுச்சென்றனர்.
வவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி திலீபன் மற்றும் இராணுவ அதிகாரிகள், சுகாதாரதரப்பினர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 53 பேருக்கு அஸ்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதேவேளை,வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி (சுப்பர்மாக்கட்) சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த அங்காடி 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு பணிபுரியும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்று காலை முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலகமாக கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.
இதனடிப்படையில் 30 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலம் என்ற காரணத்தினால் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்ட அட்டையினைக்கொண்டு செல்லமுடியும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. பொதுச்சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தலைமையில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு செய்தியாளர் - குமார்
மன்னார்
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து மன்னார் எருக்கலம்பிட்டி, தாராபுரம், சாந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவருக்கும் அதே நேரம் கொரோனா முடக்க நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தற்காலிகமாக வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் "அஸ்ராசெனிக்கா" தடுப்பூசியை பெற்றுக்கொண்டு கடமை நிமித்தம் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத சுகாதார துறையை சேர்ந்தவர்களுக்கும் இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் செய்தியாளர் - ஆசிக்






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
