இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படும் அரச உயர் அதிகாரிகள்
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் சில பிரதான அதிகாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அரச புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகள் சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அந்த அமைப்புகளுக்குக் கிடைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம், துறைமுகம், விமான நிலையம், சுகாதார அமைச்சு உட்பட அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளைத் திட்டமிட்டு அந்த அமைப்புகள் தமது நிலைப்பாடுகளுக்குள் ஈர்த்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அதிகாரிகளில் பேராசிரியர், பொறியியலாளர்கள், கணனி தொழில்நுட்பவியலாளர் உட்பட முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்கள் மற்றும் அந்த முக்கிய இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம், குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 21 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri