செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட மற்றுமொரு பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் தமாரா, கெஹல்பத்தர பத்மேவின் நண்பரான தருன் என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சீவவைக் கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தின இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த வழக்கறிஞர் வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி வழக்கறிஞர் அடையாள அட்டை, வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதி மற்றும் வழக்கறிஞர்களின் உடைகளில் பொருத்தப்படும் 2 டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.
சஞ்சீவவின் கொலை
சந்தேக நபர் கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வந்துள்ளார்.

பத்மேவின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் சஞ்சீவவின் கொலைக்கு உதவ முன்வந்துள்ளார்.
தருனின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் இஷாரா செவ்வந்தியை சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு இரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 2 பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சஞ்சீவ கொலைக்கான துப்பாக்கியை மறைப்பதற்காக கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி எடுத்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்திற்குள் நுழைவதற்காக வழக்கறிஞர்கள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க இஷாரா செவ்வந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதியையும் இந்த வழக்கறிஞர் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொலையை செய்த கமாண்டோ சாலிந்து வழக்கறிஞர் சீருடை அணிய தேவையான இரண்டு டைகளையும் வழக்கறிஞர் செவ்வந்திக்கு வழங்கியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இஷாராவிடம் நடத்தப்பட்ட விசாரணை
சஞ்சீவ கொலைக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கறிஞர் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதற்கமைய, நேற்று முன்தினம் இரவு கடவத்தை பகுதியில் நடந்த சோதனையின் போது விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கறிஞரை கைது செய்ய முடிந்தது.
குற்றப் புலனாய்வுத் துறை இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறது.
பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் டுபாயில் இருந்தபோது, பேலியகொட குற்றப் பிரிவின் அதிகாரி லிண்டன் சில்வாவை மிரட்டி வெளியிட்ட குரல் பதிவு சமீபத்திய நாட்களில் பரவியது.
அந்த பதிவில், லிண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தது தருன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது தருன் டுபாயில் இருந்ததுடன், அவர் இன்னமும் டுபாயில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam