தப்புவதற்கு முன் சிம் அட்டையை துண்டித்த செவ்வந்தி..! விரைவில் முக்கிய புள்ளிகள் கைது
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், செவ்வந்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர் நீர்கொழும்பு பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
குறித்த அழைப்பில் இஷாரா செவ்வந்தி, இது தான் என்னுடைய கடைசி தொலைபேசி அழைப்பு எனவும் இனி தொலைபேசி அழைப்புக்களை கூட மேற்கொள்ள மாட்டேன் எனவும் கூறியதாக விசாரணைகளில் தெரியவந்தது.
முக்கிய புள்ளிகள்
அதனை தொடர்ந்து, அந்த அழைப்புக்காக செவ்வந்தி பயன்படுத்திய சிம் அட்டையினையும் அவர் துண்டித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, பொலிஸார் நடத்திய விசாரணைகளில் குறித்த சிம் அட்டையின் இலக்கமானது அது வரை செவ்வந்தி தொடர்ச்சியாக பயன்படுத்தி கொண்டிருந்த இலக்கம் இல்லை என கண்டறிந்துள்ளனர்.
இதற்கிடையில், குறித்த பொலிஸ் அதிகாரி தவிர்த்து மேலும் பல முக்கிய புள்ளிகள் இஷாரா செவ்வந்தியை நாடுகடத்திய விடயத்தில் தொடர்புற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
எனவே, செவ்வந்தி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் குறித்த முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
