இரகசிய விசாரணையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியுடன் மேலும் 05 பேர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நேபாளத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கை
குற்றப்புலனாய்வுத் துறை, கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“சிஐடி மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு என்பன கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.
செவ்வந்தியை கைது செய்ய நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் அவர் மறைந்திருப்பதாகக் கூறப்படும் பல இடங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பின்னர் பொலிஸாரால் அவரை நேபாளத்தில் கைது செய்ய முடிந்ததுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



