SRH அணியின் புதிய அணித்தலைவராக களமிறங்கும் பிரபலம்
ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்பப் போட்டிகளில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் வழக்கமான அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் முதுகு வலி காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிதலைவர் மாற்றம்
இதன்படி, இஷான் கிஷன் அணித்தலைவராகவும், இளம் வீரர் அபிஷேக் சர்மா துணை தலைவராகவும் செயல்படுவார்கள்.

மார்ச் 23 அன்று இந்தியா வரும் பேட் கம்மின்ஸ், ஆரம்பத்தில் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முழு தகுதியை எட்டியவுடன் மீண்டும் அணித்தலைவர் பொறுப்பை ஏற்க போகிறார்.
27 வயதான இஷான் கிஷன் 119 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால், அவருக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.