இசைப்பிரியாவின் கொலைக்குப் பின்னால் உள்ள புலனாய்வாளர்! சபையில் சிறிநேசன் கேள்வி
ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2ஆம் நாள் வாசிப்பு மீதான வாவாதத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இசைப்பிரியா என்ற ஊடகர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இசைப்பிரியாவின் கொலை
இந்தநிலையில், இசைப்பிரியாவின் கொலைக்கு காரணமாக இருந்தவர் ஒரு புலனாய்வு பனிப்பாளர் என்றும் அவற்றுள் ஜகத் ஜயசூரிய என்பவரும் உள்ளடங்குவதாக சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியோடு வந்தவர்கள் கூட கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர் எனவும் அதற்கு பொறுப்பாளி சர்வேந்திர சில்வா என சரத் பொன்சேகா கூறியுள்ளதாகவும் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.