ஊழல்வாதிகள் பலரின் முகவரியாக மாறப்போகும் வெலிக்கடை சிறைசாலை! பிமல் ரத்னாயக்க எச்சரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சட்டத்தின் முன் நிறுத்துகின்றமை சட்டத்தின் பழிவாங்கலா? என்று அமைச்சர் பிமல் ரத்னாயக்க(Bimal Rathnayake) கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்றையதினம்(1) இடம்பெற்ற கூட்டடொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
வெலிக்கடை சிறையில் கூட்டம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி கூறியது போல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் விரைவில் வெலிக்கடை சிறையில் நடத்தப்படலாம்.
ஏனெனில் அவர்களில் பலர் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். பலரின் முகவரி மாற்றப்பட்டு வெலிக்கடை அவர்களின் முகவரியாக மாற்றப்படும்.
முன்னாள் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான தற்போதைய சட்ட நடவடிக்கைகளில் மக்கள் சக்தியின் தாக்கம் தெளிவாகத் தெரிகின்றது.
மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமையினாலேயே ஊழல் அதிகாரிகள், மோசடி செய்பவர்கள் மற்றும் திருடர்களை எங்களால் பிடிக்க முடிகின்றது” என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
