ஜே.வி.பி குற்றச் செயல்களை ஒப்புக்கொள்கின்றதா..! கம்மன்பில விளக்கம்
பட்டலந்த விசாரணை அறிக்கையை ஏற்கும் அரசின் முடிவு, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவே அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
படலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அதிகாரத்தில் முழுவதுமாக ஜே.வி.பி. செய்த குற்றங்கள் பற்றிய விவரங்களே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு
இந்த அறிக்கையை ஓர் ஆவணம் மட்டுமே எனக் கருத வேண்டும் எனவும், இதை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கும், அவரின் குடி உரிமைகளை நீக்குவதற்கும் அரசாங்கத்திற்கு முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு 1948 விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது எனவும் இவ்வாறான ஆணைக்குழுவிற்கு குற்றவாளி யார், குற்றமற்றவர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
1977 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்களுக்கு மட்டுமே நீதிமன்ற அதிகாரங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.