இளைஞர்களுக்கு ஆதரவாக தந்தைமார் களமிறங்கினால் பாரிய விளைவுகள் ஏற்படும்! எச்சரிக்கும் தந்தை ஒருவர்
இலங்கையில் எரிபொருள் வரிசையில் நின்ற 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
“அரசாங்கம் இதற்கு முன்னர் வாங்கிய அடியை போன்று அடுத்த அடி இருக்காது. பாரிய விளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
போராட தயாராகும் தந்தைமார்
நாட்டில் இதுவரையில் இளைஞர், யுவதிகள் மாத்திரமே தங்கள் கோபத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் தந்தைமார் வீதிக்கு இறங்கி கோபத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என அரசாங்கத்திற்கு இன்னமும் தெரியவில்லை.
நான் 3 பிள்ளைகளின் தந்தை. எங்கள் பொறுமையின் எல்லையை சோதித்து பார்க்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறிக்கொள்கிறோம்.
தந்தைமார் வீதிக்கு இறங்கினால் அது மரண அடியாத தான் இருக்கும். நாங்கள் அனைத்தையும் எங்கள் பிள்ளைகளுக்காகவே செய்கின்றோம்.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
இளைஞர், யுவதிகள் போன்று தந்தைகளுக்கு பொறுமை இல்லை. தந்தைகள் வீதிக்கு இறங்கினால் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நேர உணவு சாப்பிட முடியாத நிலைமை ஏற்படும்.
எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாத ஒரு மோசமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என அவர் அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri