இலங்கையைச் சுற்றி வரும் சீன கப்பலால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? கமால் குணரத்ன விளக்கம்
சீனாவில் இருந்து உரத்தினை ஏற்றிவந்த கப்பல் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து குறித்த கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள உரமானது பயன்பாட்டிற்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அது பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் குறித்த கப்பல் இன்னும் சில நாட்களில் மீண்டும் புறப்பட்டுச் சென்று விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனக் கப்பலின் வருகை தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என்பதை யோசிப்பது கடினம்.
சீனாவில் இருந்து குறித்த கப்பல் வந்தது, எனினும் இந்த கப்பலில் உள்ள உரம் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் குறித்த உரத்தினை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே குறித்த கப்பல் எமது நாட்டின் கரைக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. எனவே இந்த கப்பலால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri