நாடளாவிய ரீதியில் கடுமையான வறட்சி! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளது.
தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலை
இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening