இலங்கையின் இசைக்குயில் நந்தா மாலினியின் மறைவு - பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள்ளன.
அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு
மதச் சடங்குகளைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணி வரை உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
பின்னர், உடலை ஏற்றிச் செல்லும் இறுதி ஊர்வலம், இறுதிச் சடங்குகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் கடந்த 20ஆம் திகதி காலமானார். அவருக்கு அரசியல்வாதிகள் , பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...