கொட்டகலையில் வனப்பிரதேசத்திற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு(Video)
நுவரெலியா மாவட்டம் திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள வனப்பிரதேசத்திற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
இதனால் தொலைபேசி வயர்கள், மின் வயர்கள் மற்றும் குடிநீர்க் குழாய்கள் என்பன சேதமடைந்துள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு
இப்பகுதியில் சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்கின்றன.
இதனால் எதிர்காலத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வனப்பகுதியில் எமது நாட்டுக்கு உரித்தான பறவையினங்கள், மான், மரை , பன்றி, முயல் உள்ளிட்ட பிராணிகளுக்கும் இந்த தீ காரணமாக வாழ்விடங்கள் இழக்கப்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
வறட்சியின் போது மக்கள் சிந்திக்காமல் செய்யும் விஷமத்தனமான செயல்கள் காரணமாக உயிரினங்களும் பொதுமக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிகாட்டுகின்றனர்.
