பேருந்து தரிப்பிடங்களில் நடைபெறும் பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்
பேருந்துக்காக மக்கள் தரித்து நிற்கும் இடமாக பேருந்து தரிப்பிடங்கள் காணப்படுகின்றன.
சில பொறுப்பற்ற மக்களின் செயற்பாடு ஏனையவர்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துகின்றது.
குப்பைகளை தரிப்பிடத்தினுள் இடல் ,வெற்றிலை, பாக்கு சாப்பிட எச்சிலை தரிப்பிடத்தினுள்ளும் வெளியேயும் உமிழ்தல், தரிப்பிடத்திற்கு அருகில் சிறுநீர் கழித்தல், தரிப்பிட சுவரில் கீறுதல் ,பெயர் எழுதல் போன்ற செயற்பாடுகள் ஏனையவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் பேருந்து தரிப்பிடத்தின் நிலையும் மாற்றத்திற்கு உள்ளாகின்றது.
நோய் இன்றிய வாழ்வு
நாம் பயன்படுத்தும் இடங்களை சுத்தமாக வைத்திருத்தல் நோய் இன்றிய வாழவும் மன அமைதிக்கும் கைகொடுக்கும்.
மேலும், பொது இடங்களில் ஏனையவர்களுக்கு அசௌகரியம் விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்தல் சிறந்ததாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |