கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பற்ற செயற்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வட்ட கட்சி மம்மில் கிருஷ்ணர் ஆலய பகுதியில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - வட்டக் கட்சி மம்மில் கிருஷ்ணர் ஆலயத்துக்கு அன்தித்த பகுதியில் உள்ள மாயவனூர் பிரதான வீதியில் அமைக்கப்பட்ட மதகானது பொருத்தமற்ற இடத்தில் அமைக்கப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக மேற்படி சபையின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும், கருத்து தெரிவிக்கும் போது,
மழை வெள்ளம்
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக வட்டக்கச்சி மம்மில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற வழியின்றி கிருஷ்ணர் கோவில் வளாகத்துக்குள் தேங்கியதுடன் அதனால் ஏற்பட்ட மின்னொளுக்கின் காரணமாக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றது.
தற்போது பிரதான வீதியில் அமைக்கப்பட்ட மதகினை பொருத்தமான மாற்றிடம் ஒன்றில் அமைக்குமாறு தாங்கள் கூறிய போதும் உரிய இடத்தில் அமைக்கவில்லை.
இந்நிலையில், பொருத்தமற்ற இடத்திலேயே அமைக்கப்பட்டதனால் வெள்ள அனத்தம் ஏற்பட்டது.
அதாவது 21. 05. 2021 அன்று கள ஆய்வு செய்து பிரதேச சபையின் வீதியானதால் அவர்களது ஒப்புதலை பெற்று தருமாறு கேட்டு நானும் ஒரு பிரதேச சபை உறுப்பினராக கடிதம் எழுதி இருந்தேன்.
இதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற 41ஆவது சபை அமர்வில் குறித்த விடையம் தொடர்பில் தெரிவித்தேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
