ஹட்டன் கல்வி வலய ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கான இடமாற்றம் இடமாற்ற சபையின் அனுமதியின்றி ஹட்டன் வலய கல்வி பணிப்பாளரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்தின் ஒன்றிணைந்தகூட்டமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதன் போது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர் இடமாற்ற சபை
இந்த இடமாற்றம் காலம் தாழ்த்தி இடம்பெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் 28ம் திகதி இடம் பெறவேண்டிய இடமாற்றம் இதுவரையில் இடம்பெறவில்லை.
ஆறு மாத காலப்பகுதியில் இடமாற்றங்கள் இடம் பெறமால் இருந்த வேளையில் ஹட்டன் வலய கல்வி பணிமனையில் உள்ளவர்கள் மாகாண திணைக்களத்திற்கு பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லை என அறிவித்தலை விடுத்து தேவையின் சேவை கருதி இது போன்ற முறையற்ற முறையில் இடமாற்றங்களை வழங்குகிறார்கள்.

இது போன்ற இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் அனுமதியோடு இடம்பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளாவிட்டால் எதிர் வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தனர் இதேவேளை முறையற்ற முறையில் இதுவரையிலும் 48இடமாற்றங்கள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை காலமும் இரண்டாவது இடமாற்றத்தினை வழங்க அதிகமான காலம் எடுத்திருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri