பாடசாலைக்கு விடுமுறை! சீரற்ற காலநிலையால் தொடரும் அபாயம்
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு முன்னாள் இரண்டு பெரிய மரங்கள் உள்ளதாகவும், அது முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதிபரின் முடிவுக்கு ஏற்ப அதனை அகற்றும் பொருட்டு பாடசாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்றும் நாளையும் பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்திளர் தெரிவித்தார்.
பாடசாலையில் 358 மாணவர்கள்
இதன்படி குறித்த பாடசாலையில் 358 மாணவர்கள் கல்வி கற்றுவருவதாகவும், 1 முதல் 13ஆம் வகுப்பு வரை பாடசாலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய பெரிய மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன என்றும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு மரங்களை வெட்டுமாறு அதிபரால் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்காததால், மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீது விழுந்துள்ளன என்றும் இதனால் பாடசாலை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப்பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
