கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

Sri Lankan Tamils Kilinochchi Vavuniya Sri Lankan Peoples Sri Lanka Government
By Thevanthan Jul 11, 2026 11:10 AM GMT
Report

சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த பேருந்துக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்

சாரதி மீது சட்ட நடவடிக்கை

கடந்த 30.06.2026 அன்று குறித்த பேருந்தின் சேவையின்போது பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Irregularities On The Kilinochchi Vavuniya Route

இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றங்கள், அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்பச் சேவையில் ஈடுபடாமை. அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை. வழித்தட அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பாதையைத் தவிர்த்து வேறு பாதையில் சேவையில் ஈடுபட்டமை. பேருந்தில் பயணித்த பயணிகளுடன் முரண்படும் வகையில் தகாத முறையில் நடந்துகொண்டமை.

மேற்குறிப்பிட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உரிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தினத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனருக்கு 7 நாட்களுக்குப் பணித்தடையும் (வேலை நிறுத்தம்) விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 01.07.2026 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பேருந்துக்கான கடுமையான நிபந்தனைகளுடனான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் காலை 9.20 மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று, ஓட்டுதல் குறிப்புத் தாளைப் பதிவுசெய்து காலை 9.50க்குப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.

இதேவேளை, காலை 9.55க்குக் கிளிநொச்சி பொது மருத்துவமனையிலுள்ள நேரக்கணிப்பாளர் நிலையத்தைக் கடந்து, காலை 11.30க்கு வவுனியா பேருந்து நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.

கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Irregularities On The Kilinochchi Vavuniya Route

வவுனியாவிலிருந்து திரும்பும் பயணத்தின்போது, பிற்பகல் 4.15க்கு வவுனியா பேருந்து நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று ஓட்டுதல் தாளைப் பதிவுசெய்து, 4.45க்குப் புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு வெளித்தரிப்பிடத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்க வேண்டும்.

மேலும், பேருந்தில் பணியாற்றும் சாரதி, நடத்துனர்களின் பெயர் விவரங்கள் வழித்தட அனுமதிப் பத்திரத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் தமது தொழில் அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், அதிகார சபையின் விதிகளுக்கு அமைவாகவும் சுய ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும் எனக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Irregularities On The Kilinochchi Vavuniya Route

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமுமின்றி முறைப்பாடு செய்ய முடியும்.

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 5 இலட்சம் இழப்பீடு

29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 5 இலட்சம் இழப்பீடு

கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு - வெலிக்கடை அதிகாரிகளுக்கு அழைப்பு

கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு - வெலிக்கடை அதிகாரிகளுக்கு அழைப்பு


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US