யாழ். மாவட்ட அதிபர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு (Photos)
வட மாகாண அதிபர் சேவை நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாக தெரிவித்து இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (27.12.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அதிபர் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
மகஜர் கையளிப்பு
போராட்டத்தின் போது இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தனவினால் 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தினை தொடர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலும் மகஜரினை கையளிக்கவுள்ளதாக இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam