நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஜப்பானிய விண்கலம்
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலமான “ஸ்மார்ட் லேண்டர்" நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 5வது நாடாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியா இந்த ஆண்டு சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியிருந்தது.
Japan's SLIM 'moon sniper' lander arrives in lunar orbit for Christmas https://t.co/QitiveydSj pic.twitter.com/vGvW66bSsk
— SPACE.com (@SPACEdotcom) December 25, 2023
தரையிறக்க செயற்பாடு
இது தொடர்பில் ஜப்பான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நிலவின் தெற்கு மற்றும் வட துருவங்களை இணைக்கும் நீள்வட்ட நிலவு சுற்றுப் பாதையில் சுமார் 6.4 மணி நேர இடைவெளியில் விண்கலம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் சந்திரனுக்கு (பெரிலூன்) மிக நெருக்கமான இடத்தில் சுமார் 600 கிலோமீட்டராகவும், சந்திரனில் இருந்து (அப்போலூன்) தொலைவில் உள்ள புள்ளியில் 4,000 கிலோமீட்டராகவும் காணப்படும்.
"மூன் ஸ்னைப்பர்" என்று அழைக்கப்படும் இந்த விண்கலமானது சந்திரனுக்கு தனித்துவமான நீண்ட பாதையில் சென்றது.
வெற்றி பெற்றால், சந்திரனில் தரையிறங்கும் மிகச்சிறிய மற்றும் எடை குறைந்த விண்கலமாகவும் இது காணப்படும்.
ஹகுடோ விண்கலம்
டோக்கியோவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்பேஸ் தனியார் விண்வெளி மையம், ஹகுடோ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவி இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திர மேற்பரப்பில் அது விழுந்து தோல்வியடைந்தது.
எனினும் குறித்த விண்கலம் மிகச் சிறிய விண்கலம் ஆகும். வெறும் 200 கிலோ கிராம் எடை கொண்டது.
அதேசமயம் சந்திரயான் - 3 லேண்டர் சுமார் 1,750 கிலோ கிராம் எடை கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்திலிருந்து 100 மீட்டருக்குள் தரையிறங்குவதன் மூலம் துல்லியமான தரையிறங்கும் திறன்களை நிரூபிப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
