வெடித்து சிதறிய IRIS Dena! குறிவைத்து தாக்கிய அமெரிக்க நீர்மூழ்கி: பின்னணியில் சக்திவாய்ந்த நாடு
இந்திய பெருங்கடலில் ஈரானிய கடற்படை போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட டார்பிடோ தாக்குதல் தொடர்பாக பல விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் மூன்று அவுஸ்திரேலியர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தம்
இந்த தகவலை அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வழங்கிய பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் இருந்த மூன்று பேர் அவுஸ்திரேலிய குடிமக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இருப்பினும், அவர்களில் யாரும் ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையிலும் நேரடியாக ஈடுபடவில்லை.”
அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்று பேரும் பயிற்சி பெறுகிறார்கள்” என்றும் மேலும் கூறியுள்ளார்.
ஐஆர்ஐஎஸ் தேனா தாக்குதல்
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு இலக்கான கப்பல் தொடர்பில் கிடைத்த அவசர சமிக்ஞையைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதலில் 87 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 10 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan