வஞ்சகமான அமெரிக்க ஜனாதிபதி- முத்திரை குத்திய IRGC! ட்ரம்பின் கருத்தை மீண்டும் திட்டவட்டமாக மறுப்பு
ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி, ட்ரம்ப்பை ஒரு “வஞ்சகமான அமெரிக்க ஜனாதிபதி” என்று வர்ணித்ததோடு, “அவரது முரண்பாடான நடத்தை, போர்க்களத்தில் இருந்து எங்களைக் கவனத்தைத் திசை திருப்பாது” என்றும் கூறியுள்ளது.
ட்ரம்ப், "முக்கியமான உடன்பாட்டு அம்சங்கள் எட்டப்பட்டதாகக் கூறியிருந்த நிலையில், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஈரான் மறுப்பு
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை எதிரொலிக்கும் வகையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மறுத்துள்ளார்.
2/ No negotiations have been held with the US, and fakenews is used to manipulate the financial and oil markets and escape the quagmire in which the US and Israel are trapped.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) March 23, 2026
அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை, மேலும் நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாளுவதற்கும், அமெரிக்காவும் இஸ்ரேலும் சிக்கியுள்ள சகதியிலிருந்து தப்பிப்பதற்கும் போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன," என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு முழுமையான மற்றும் வருத்தமளிக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்” என ஈரான் கோருகிறது என சபாநாயகர் தனது இரண்டாவது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கு அடையப்படும் வரை, ஈரானிய அதிகாரிகள் தங்களது உன்னத தலைவருக்கும் மக்களுக்கும் உறுதுணையாக நிற்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

ஆனால் இன்று(23) ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்ட இராணுவ தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் வார இறுதியில் “பயனுள்ள பேச்சுவார்த்தைகள்” நடைபெற்றுள்ளதாகவவும் குறிப்பிட்டார்.
இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam