பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் ஆட்டத்தை விமர்சித்த இர்பான் பதான்!
நமீபியாவுக்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், டி20 உலகக் கிண்ணப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இவர் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்ற அதே சமயம், முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைக் குவித்தது.
சதம் நிறைவு
200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி, 97 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதன்படி , 102 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் சூப்பர் 8 (Super Eight) சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அதிருப்தி வெளியிட்ட இந்திய முன்னாள் வீரர்
ஃபர்ஹான் சதம் கடந்த போதிலும், கடைசி ஓவரில் அவர் கையாண்ட விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது அதிருப்தியை வெளியிட்டார். கடைசி ஓவரில் 99 ஓட்டங்களுடன் இருந்த ஃபர்ஹான், ஒரு ஓட்டத்தைப் பெற்று தனது சதத்தை நிறைவு செய்ததை பதான் விமர்சித்தார்.
சதம் அடித்தது மகிழ்ச்சிதான், ஆனால் அந்த நேரத்தில் ஒரு ஓட்டத்தை மட்டும் எடுத்தது நம்ப முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடைசி ஓவரின் இறுதிப் பந்தை ஃபர்ஹான் அடிக்க முயற்சிக்காமல் விட்டுவிட்டதையும் பதான் சாடியுள்ளார். அதே ஓவரில் ஷதாப் கான் இரண்டு சிக்ஸர்களை விளாசியதை சுட்டிக்காட்டிய பதான், "இதைத்தான் நீங்கள் செய்திருக்க வேண்டும், சுழற்பந்து வீச்சாளரைத் தாக்கி விளையாடியிருக்க வேண்டும்," என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் வெற்றியின் மூலம் குரூப் A பிரிவில் இருந்து இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அணியாக பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam