கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து
கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பண்டாரநாயக்க கொள்கலன் களஞ்சிய பகுதியில் திடீரென தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து கொழும்பு துறைமுக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் கடற்படையினர் மற்றும் துறைமுக பணியாளர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒயில் பில்டர் மற்றும் ரசாயன பொருட்கள் கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொள்கலனின் ஒரு பகுதி தீயினால் சேதமடைந்ததாகவும் ஒரு பகுதியை மீட்க முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக உயிர் ஆபத்தோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என கொழும்பு துறைமுக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
