ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) திட்டமிட்டவாறு எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சினை (Ministry of Foreign Affairs) மேற்கோள் காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உமா ஓயா திட்டம்
ஈரானிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈரான் ஜனாதிபதி கலந்து கொள்ள வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் - இஸ்ரேலிய மோதல் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியிருந்தது.
எனினும் முன்னரே திட்டமிட்டது போன்று எதிர்வரும் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |