ஈரான் ஜனாதிபதிக்கு ஆன்மிக தலைவரால் வழங்கப்பட்ட மோதிரம் கண்டுபிடிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு(Ebrahim Raisi) அந்நாட்டு ஆன்மிக தலைவரால் வழங்கப்பட்டதாக நம்பப்படும் மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மோதிரம் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகியது.
அணை திறப்பு விழா
அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி உலங்கு வானுர்தி மூலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் புறப்பட்டார்.
இந்த நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்செகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் உலங்கு வானுர்தி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |