இஸ்ரேலின் ஒன்பது இடங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல! குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானம்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலையில் டெல் அவிவ் பெருநகரப் பகுதி முழுவதும் ஒன்பது இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில், ஒரு ரயில் நிலையம் மற்றும் ஒரு கட்டடம் கடுமையாக சேதமடைந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
பி1 பாலத்தின் மீது ஏவுகணை தாக்குதல்
பி1 பாலத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலையும், அமெரிக்க இராணுவ சொத்துக்களை கொண்டுள்ள ஜோர்டான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி ஈரான் பதிலடி கொடுத்து வருகின்றது.
இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும், விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் இன்னும் தீவிரம் அடையும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஈரானில் மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தி உள்ளது. தெஹ்ரானில் இருந்து கராஜ் நகரை இணைக்கும் 136 மீட்டர் நீள பி1 பாலத்தின் ஒரு பகுதி கடும் சேதமடைந்துள்ளது.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்